/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசியில் 5ம் தேதி பா.ஜ. பொதுக்கூட்டம்: நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
/
அவிநாசியில் 5ம் தேதி பா.ஜ. பொதுக்கூட்டம்: நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
அவிநாசியில் 5ம் தேதி பா.ஜ. பொதுக்கூட்டம்: நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
அவிநாசியில் 5ம் தேதி பா.ஜ. பொதுக்கூட்டம்: நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
ADDED : நவ 01, 2025 12:16 AM
அவிநாசி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வரும் 5ம் தேதி மாலை 5:00 மணிக்கு, அவிநாசி மேற்கு ரத வீதியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற கோஷத்துடன் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதற்கான ஆலோச னைக்கூட்டம், அவிநாசியில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலையில் நடந்தது.
அவிநாசியில் நகர தலைவர் ரமேஷ் தலைமையிலும், திருமுருகன் பூண்டியில் நகர தலைவர் சண்முகபாபு தலைமையிலும், கருவலுாரில் மேற்கு ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம் தலைமையிலும், அவிநாசி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் நந்தினி தலைமையிலும், கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் பிரேமா தலைமையிலும் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக அவிநாசி சட்டமன்ற பொறுப்பாளர் மேட்டுப்பாளையம் ஜெகநாதன், இணை அமைப்பாளர் கதிர்வேலன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரியதர்ஷினி, துணை தலைவர்கள் சண்முகம்,முருகேசன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
அவிநாசி நகர் முழுவதும் பா.ஜ., கொடி, தோரணங்கள் மற்றும் விளம்பர போஸ்டர்கள், பிளக்ஸ் வைத்தல், கலை நிகழ்ச்சிகள், வீடுதோறும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்களை அழைப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

