/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டை சீரமைத்த பா.ஜ.: பொதுமக்கள் பாராட்டு
/
ரோட்டை சீரமைத்த பா.ஜ.: பொதுமக்கள் பாராட்டு
ADDED : செப் 02, 2025 11:24 PM

திருப்பூர்: பாதாள சாக்கடை பணிக்கு குழி தோண்டியதால், மினி பஸ் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதனால், பா.ஜ., சார்பில் ரோடு சரி செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, 46வது வார்டில், காமாட்சி நகர், அமர்ஜோதி கார்டன், பொன் நகர், போயர் காலனி, ஸ்ரீ ஜெய் நகர்,, விஷ்ணுபிரியா கார்டன், வி.ஜி.வி., கார்டன், செந்தில் நகர், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதி வழியாக மினி பஸ் போக்குவரத்து உள்ளது. சமீபத்தில், இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது.
குழாய்கள் பதித்த பின் ரோடு முறையாக மூடப்படாமல் இருந்தது. இதனால், ரோடு குண்டும் குழியுமாகவும், வாகனங்கள் செல்ல வழியில்லாமலும் இருந்ததால், மினி பஸ் மணியகாரம்பாளையம் வழியாக காஞ்சி நகர் பகுதி வரை சென்று திரும்பியது.
இதனால், மினி பஸ்சைப் பயன்படுத்திய பலர் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பா.ஜ., வினர் உடனடியாக பொக்லைன் இயந்திரம் ஏற்பாடு செய்து, குண்டும் குழியுமாக இருந்த ரோட்டை ஓரளவு சரி செய்தனர். இதனையடுத்து, அப்பகுதி வழியாக மீண்டும் மினி பஸ் இயக்கம் நேற்று முதல் துவங்கியது.
இப்பணியை செய்த பா.ஜ.,வினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.