ADDED : பிப் 06, 2026 05:25 AM

திருப்பூர்: திருப்பூரில் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பா.ஜ., நிர்வாகிகளுடன் வானதி சீனிவாசன் ஆலோசனை செய்தார்.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள கருவம்பாளையம், செரங்காடு மண்டல பா.ஜ. நிர்வாகிகள் சந்திப்பு, பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், பா.ஜ. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், துணை தலைவர் நடராஜன் உள்ளிட்ட மாவட்ட, மண்டல தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் களப் பணியாற்றுவது குறித்தும், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வார்டுகளில் பூத்களை வலுப்படுத்த தேவையான விஷயங்களை செய்ய வேண்டும். ஒவ்வொரு சக்தி கேந்திரத்துக்கு உட்பட, மூன்று பூத்களில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகள் தங்களுக்கான பணிகளை முழு மூச்சாக செய்ய வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
