ADDED : அக் 21, 2024 04:01 AM

அ நிறம் | அளவு
திருப்பூர் : மகாராஷ்டிரா மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,வினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் மற்றும் செவிலியர்களுக்கு இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கார்த்திக் ஏற்பாடு செய்திருந்தார். தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு சேலை வழங்கப்பட்டது.
முன்னதாக, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் முன்பாக அன்னதானத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மண்டல தலைவர் அங்குராஜ், ஆன்மிக பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவா மற்றும் மாநில, மாவட்ட, மண்டலம் அணி பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
