ADDED : ஏப் 06, 2026 08:15 PM

அ நிறம் | அளவு
அவிநாசி:அவிநாசி (தனி) தொகுதி பா.ஜ. வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான முருகன், நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்யும் முன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார். அவிநாசியப்பர், கருணாம்பிகை அம்மன், ஸ்ரீசுப்ரமணியர் உட்பட அனைத்து சன்னதிகளிலும் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
கனகசபை மண்டபத்தில், ஸ்ரீ நடராஜப் பெருமான் சிவகாமி அம்பாள் சன்னதி முன், முருகனுக்கு, கோவில் சிவாச்சார்யார்கள், பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து பிரசாதம் அளித்தனர். வேட்பாளருடன், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
---
பா.ஜ. வேட்பாளர் முருகனுக்கு பரிவட்டம் கட்டி பிரசாதம் அளித்த சிவாச்சார்யர்கள்.
