ADDED : பிப் 21, 2024 12:03 AM
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகர அங்கேரிபாளையம் மண்டல பா.ஜ., சார்பில், வாகன தெருமுனை பிரசார ஊர்வலம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் ராம்குமார், தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் செந்தில்வேல், பொது செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர் கலாமணி உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன், விஸ்வகர்மா திட்டத்தில் நிதி உதவி என பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்தனர்.
பல்லடம் அருகே மாதப்பூரில் நடைபெற உள்ள, 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்பது குறித்தும் பிரசாரம் செய்யப்பட்டது. ஊர்வலம், 23வது வார்டு வளையங்காடு பகுதியில் துவங்கி, செட்டிபாளையத்தில் நிறைவு பெற்றது.

