/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் கடைகளில் கருப்புக்கொடி
/
திருப்பூர் கடைகளில் கருப்புக்கொடி
ADDED : டிச 08, 2024 11:47 PM

திருப்பூர் : சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் வாடகை கட்டடங்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிப்பை கண்டித்து, திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், இன்று முதல் கருப்புக்கொடி ஏற்றி போராட்டமும், 18ல் முழு கடையடைப்பு போராட்டமும் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, ஊத்துக்குளி ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடை, பேன்சி, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் நேற்று மதியம் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. வரும், 17ம் தேதி வரை போராட்டம் தொடர உள்ளது.
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் துரைசாமி கூறுகையில், ''வரும் 18ல் கடையடைப்பு போராட்டத்துக்கு பின், கருப்பு சட்டை அணிந்து ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் முறையிடுவது போன்ற போராட்டங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், வியாபாரிகளின் பாதிப்பை உணர்த்தும் விதமாகவும் தொடர் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
வியாபாரிகள் போராட்டத்துக்கு அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் 16 முதல் 18 வரை, அ.தி.மு.க.,வினர் இல்லங்களில் கருப்பு கொடியேற்ற அக்கட்சி அறிவுறுத்தி உள்ளது.