ADDED : ஆக 13, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு ராயபுரம், டி.எம்.சி. காலனி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குச் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒருமுறை நல்ல தண்ணீரும், பத்து நாட்களுக்கு ஒருமுறை உப்புத் தண்ணீரும் வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.
இம்முறை இரண்டு வாரங்களுக்கும் மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அப்பகுதி மக்கள், நேற்று காலை காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனடியாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் காவல் துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
––
மறியலில் ஈடுபட்ட டி.எம்.சி. காலனி மக்கள்.
