/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரன்ட்லைன் பள்ளியில் ரத்த தான முகாம்
/
பிரன்ட்லைன் பள்ளியில் ரத்த தான முகாம்
ADDED : ஜன 28, 2025 05:36 AM

திருப்பூர் : திருப்பூர் பிரன்ட்லைன் அகாடமி பள்ளி, இன்டரேக்ட் கிளப், ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கி சார்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு, ரத்ததான முகாம் நடந்தது.
பள்ளி செயலாளரும், ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கி இணை செயலாளருமான சிவகாமி தேசியக்கொடியேற்றி, முகாமை துவக்கி வைத்தார்.
ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்தவங்கி தலைவர் ஆனந்தராம், பள்ளி தாளா ளர் சிவசாமி, பள்ளி முதல்வர் வசந்தராஜ், பள்ளி துணை முதல்வர் ரமாசுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவிந்தராஜ் என்பவர், 63வது முறையும், மில்லேனியம் பள்ளி ஆசிரியர் பிரின்ஸ்டாஸன், 31வது முறையும் ரத்ததானம் செய்தனர். சதாசிவம் என்பவர் 25வது முறை ரத்ததானம் செய்தார்.
ரத்த தானம் செய்தவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு வழங்கப்பட்டது. மொத் தம், 161 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.