/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுப்பையா பள்ளியில் ரத்த தான முகாம்
/
சுப்பையா பள்ளியில் ரத்த தான முகாம்
ADDED : செப் 29, 2024 02:14 AM

திருப்பூர்: திருப்பூர் சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் ரத்த தான முகாம் நடந்தது.
ரோட்டரி சங்க தலைவர் ரவீந்திரன், சிறப்பு விருந்தினர் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர் வைத்தியநாதன், துணை தலைவர் பாரதிதாசன், சுப்பையா பள்ளி முதல்வர் ஆரோக்கிய ஜெரால்டு மற்றும் பள்ளி தாளாளர் சுகுமாரன், ரோட்டரி சங்க உறுப்பினர் நாகேஷ் மற்றும் மாவட்ட ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்த ராம், மண்டல ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் மற்றும் ரத்த தான மைய தலைவர் கமலபாஸ்கர் ஆகியோர் முகாமை விழாவை துவக்கி வைத்தனர். இதற்கான விழிப்புணர்வு, பள்ளி மாணவர்ளுக்கு ஏற்படுத்தப்பட்டது. முகாமில், 37 பெற்றோர் ரத்த தானம் வழங்கினர். அனைவருக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
---