
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உலக ரத்ததான தினத்தையொட்டி, உடுமலை அபெக்ஸ் கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
உடுமலை ஐ.எம்.ஏ., ரத்த வங்கியில் நடந்த நிகழ்வில், சங்கத்தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ரத்ததானம் செய்தனர். ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து, சங்கத்தின் செயலாளர் சீதாராமன், சங்க மாவட்ட ஆளுநர் பாலசுப்பிரமணியம், முன்னாள் ஆளுநர் கருணாநிதி உள்ளிட்டோர் பேசினர்.