/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சுகாதார நிலையத்தில் சிகிச்சை
/
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சுகாதார நிலையத்தில் சிகிச்சை
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சுகாதார நிலையத்தில் சிகிச்சை
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சுகாதார நிலையத்தில் சிகிச்சை
ADDED : டிச 16, 2024 12:36 AM
திருப்பூர்; சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
'அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை அளிக்க வேண்டும்; 45 வயதுக்கு மேற்பட்ட, இணைநோய் உள்ளவர்களை கண்டறிந்து, உயர்சிகிச்சைக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்,' என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை என்று தெரியவந்துள்ளதையடுத்து, பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தரப்பில் இருந்து, மாவட்ட சுகாதாரத்துறைக்கு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், 'சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்துக்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை வழிமுறை ஒரே விளக்கப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது; இதை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான சிகிச்சை வழிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. வழிமுறைகள் சரிவர பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று கூறினர்.