/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறகடித்து உயரே பறக்கும் 'புளு பேர்டு' மெட்ரிக் பள்ளி
/
சிறகடித்து உயரே பறக்கும் 'புளு பேர்டு' மெட்ரிக் பள்ளி
சிறகடித்து உயரே பறக்கும் 'புளு பேர்டு' மெட்ரிக் பள்ளி
சிறகடித்து உயரே பறக்கும் 'புளு பேர்டு' மெட்ரிக் பள்ளி
ADDED : மே 10, 2025 02:46 AM
திருப்பூர்,: பல்லடம், மங்கலம் ரோட்டில் செயல்படும் 'புளு பேர்டு' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கிறது.
பள்ளி அளவில் கம்ப்யூட்டர் அறிவியல், கணிதம் பாடப்பிரிவில், மாணவி சமிகா, 600க்கு 595 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி ஹரிஷ்மிதா, 593 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம்; மாணவி தீபிகா, 592; பயாலஜி, கணித பாடப்பிரிவில், மாணவி சரண்யா, 592 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்டனர். கலைப்பிரிவு பாடத்தில், மாணவி பெனாசிர் பானு, 588 மதிப்பெண் பெற்று நான்காமிடம் பெற்றார்.
இயற்பியல், வேதியியல், வணிக கணிதம், வரலாறு பாடத்தில் தலா ஒருவர், கணிதத்தில், 16 பேர், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில், 10 பேர், பொருளியல் பாடத்தில், 5, வணிகவியல் பாடத்தில், 3, அக்கவுண்டன்ஸி பாடத்தில், 10, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில், 9 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
''தேர்வெழுதிய 209 மாணவ, மாணவியரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்; இதுவே, எங்கள் பள்ளியின் கல்வி போதிப்பு தரத்துக்கு சான்று'' என்றனர், பள்ளி நிர்வாகத்தினர்.
சாதனை படைத்த மாணவ, மாணவியர், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி தலைவர் ராமசாமி, தாளாளர் ஜெயபிரபா, துணை தாளாளர் சுகபிரியா ஆகியோர் பாராட்டினர்.