/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.எம்.எஸ்., மின் தொழிலாளர்; 20ம் தேதி வேலை நிறுத்தம்
/
பி.எம்.எஸ்., மின் தொழிலாளர்; 20ம் தேதி வேலை நிறுத்தம்
பி.எம்.எஸ்., மின் தொழிலாளர்; 20ம் தேதி வேலை நிறுத்தம்
பி.எம்.எஸ்., மின் தொழிலாளர்; 20ம் தேதி வேலை நிறுத்தம்
ADDED : ஜன 09, 2025 11:38 PM
திருப்பூர்; பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 20ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடக்குமென, பி.எம்.எஸ்., மின் தொழிலாளகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக மின்வாரியத்தில், நிறுத்தி வைக்கப் பட்டுள்ள பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும். கள உதவியாளர் பதவி அனுமதியின்படி, 'கேங்மென்'களை பணியமர்த்த வேண்டும்.
சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்ய வேண் டும். காலிப்பணிடங்களை நிரப்பி, தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு, மின்வாரிய பணியாக வரன்முறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் (பி.எம்.எஸ்.,), ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.
வரும், 20ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக, மின்வாரிய அலுவலகம் வாரியாக, ஆதரவு திரட்டும் பணி நடந்து வருகிறது.
திருப்பூர் பி.எம்.எஸ்., தொழிலாளர் சங்கம் சார்பில், நகரப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில், சக அலுவலர் மற்றும் பணியாளருக்கு, துண்டு பிரசுரங்கள் வழங்கி, போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் பணி நேற்று துவங்கியது.
பாரதிய மின் தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் கதிர்வேல், திருப்பூர் திட்ட செயலாளர் செந்தில்குமார், திட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர், தொழிலாளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி, ஆதரவு திரட்டினர்.

