/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுக்குமாடி குடியிருப்பில் வாரிய அதிகாரிகள் ஆய்வு
/
அடுக்குமாடி குடியிருப்பில் வாரிய அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 18, 2025 12:14 AM

பல்லடம் : பல்லடத்தை அடுத்த, சுக்கம்பாளையம் கிராமத்தில், 45 கோடி ரூபாய் மதிப்பில், 173 ஏக்கர் பரப்பளவில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுக்கு மேலாக கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், மொத்தமுள்ள, 8 தளங்கள், 432 குடியிருப்புகளில் இதுவரை, 127 குடியிருப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பொது மேலாளர் அன்சில் மிஸ்ரா ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டனர். குடியிருப்பில் உள்ள வரவேற்பு அறை, சமையல் அறை படுக்கை அறை, லிப்ட் உள்ளிட்டவற்றின் வசதிகள், தரம் மற்றும் பயனாளிகள் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பயனாளிகளுக்கு குடியிருப்புகள் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது, மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டது. தொடர்ந்து, விரைவில் பயனாளிகள் தேர்வினை இறுதி செய்து, பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
பல்லடம் தாசில்தார் சபரிகிரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வில் உடன் பங்கேற்றனர்.