/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புத்தக திருவிழா வரும் 16ல் நிறைவு
/
புத்தக திருவிழா வரும் 16ல் நிறைவு
ADDED : டிச 09, 2024 08:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலையில் வரும், 16ம் தேதி வரை நடக்கும் புத்தக திருவிழாவில், ஆயிரக்கணக்கான நுால்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
உடுமலை புத்தகாலயம் மற்றும்- திருப்பூர் பின்னல் டிரஸ்ட் சார்பில், 10வது உடுமலை புத்தகத் திருவிழா, உடுமலை தேஜஸ் மகாலில் துவங்கியது. வரும், 16ம் தேதி வரை நடக்கும் இந்த புத்தக திருவிழாவில், பல்வேறு துறைகள் சார்ந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்களில், ஆயிரக்கணக்கான நுால்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தினமும் மாலை, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.