/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜன., 25ல் புத்தக திருவிழா: மாணவர் திறனாய்வு போட்டி
/
ஜன., 25ல் புத்தக திருவிழா: மாணவர் திறனாய்வு போட்டி
ஜன., 25ல் புத்தக திருவிழா: மாணவர் திறனாய்வு போட்டி
ஜன., 25ல் புத்தக திருவிழா: மாணவர் திறனாய்வு போட்டி
ADDED : ஜன 09, 2024 12:12 AM
உடுமலை:திருப்பூரில் நடக்கவுள்ள புத்தக திருவிழாவை ஒட்டி, நடந்த திறனாய்வு போட்டியில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, திறமை காட்டினர்.
தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், 20வது புத்தகத்திருவிழா, ஜன., 25 முதல் பிப்., 4ம் தேதி வரை காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் வளாகத்தில் நடக்கிறது.
புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவியருக்கான கலை, இலக்கிய திறனாய்வு போட்டி, திருப்பூரில் உள்ள, 14 பள்ளிகள் உட்பட, மாவட்டம் முழுதும், 26 பள்ளிகளில் நடத்தப்பட்டது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தன. பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஜன., 30ம் தேதி புத்தக திருவிழா அரங்கில் பரிசு வழங்கப்பட உள்ளது.