ADDED : ஏப் 03, 2026 10:45 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்:அ.தி.மு.க. கூட்டணி சார்பில் செயல்வீரர் கூட்டம் நேற்று திருப்பூரில் நடந்தது. இதில் அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் மனிதம் முருகேசன் தொகுத்த வழிகாட்டி நுால் வெளியிடப்பட்டது. இந்த நுால், அ.தி.மு.க., பூத் ஏஜன்ட்டாகிய நான் ஏற்கும் பதவிப்பிரமாணம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், அ.தி.மு.க. வின் தேர்தல் வரலாறு, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் சாதனை ஆகியன குறித்த குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட மூன்று தொகுதிகளில் உள்ள னைத்து ஓட்டுச் சாவடி குறித்த விவரங்கள்,பூத் ஏஜன்ட் விவரங்கள் அதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
