ADDED : ஜூன் 20, 2025 02:16 AM
அ நிறம் | அளவு
தாராபுரம் : தாராபுரம் அருகே அலங்கியம், அய்யன்தோட்டத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 35. இவரது மூத்த மகன் சித்தார்த், 13. ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
வீட்டில் அடிக்கடி மொபைல் போனில் விளையாடி வந்துள்ளார். நேற்று முன்தினம் போனில் மூழ்கிய மகனை, தாய் முத்துலட்சுமி, கண்டித்துள்ளார்.
மனமுடைந்த சித்தார்த், முருங்கை பயிருக்கு அடிக்கும் மருந்தை குடித்தார். அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
