ADDED : மே 01, 2025 04:28 AM
அ நிறம் | அளவு
வெள்ளகோவில் : திருப்பூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் காசிநாதன், 45. இவரது மனைவி ஜெயலட்சுமி, 40. மகள் நிவேதா, 15, மகன் கமலேஷ், 14 ஆகியோருடன் வசித்து வருகிறார். மகன், மகள், இருவரும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், வெள்ளகோவிலில் உள்ள அத்தை காயத்ரி வீட்டுக்கு கடந்த, 28ம் தேதி சென்றனர்.
நேற்று மதியம் காயத்ரி, கமலேஷ் உட்பட ஆறு பேர் குருக்கத்தி, கள்ளமடை அருகில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் குளிக்க சென்றனர். அப்போது, மேலே நின்று கொண்டிருந்த கமலேஷ் கல்குவாரியில் தவறி விழுந்தார். தலையில் காயம் ஏற்பட்டது. பரிசோதனையில் கமலேஷ் இறந்தது தெரிந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
