/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருட்டு வழக்கில்சிறுவனுக்கு சிறை
/
திருட்டு வழக்கில்சிறுவனுக்கு சிறை
ADDED : நவ 19, 2025 04:40 AM
திருப்பூர்: உடுமலை உழவர் சந்தை பகுதியை சேர்ந்தவர் அப்துல்கலாம், 23. இவர் 2024 மே, 25ம் தேதி இரவு பஸ் ஸ்டாண்டில் துாங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர் அப்துல்கலாமை எழுப்பி, மொபைல் போன், 10,500 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர்.
இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 16 வயது சிறுவன் ஒருவன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர். சிறுவன் செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணை திருப்பூர் இளம் சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்று வந்தது.
இதில், 16 வயது சிறுவனுக்கு ஓராண்டு செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் தங்க வைக்கவும், போதை மறுவாழ்வு பெறும் வகையில் சிகிச்சை வழங்கவும் நீதிபதி செந்தில்ராஜா, உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தரவிட்டனர்.

