/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தற்பெருமை பேசுவது தற்கொலைக்கு சமம்'
/
'தற்பெருமை பேசுவது தற்கொலைக்கு சமம்'
ADDED : டிச 25, 2024 11:26 PM
அவிநாசி, ; அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஜெயமூர்த்தி நேற்று பேசியதாவது:
யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு.
எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கலாம்; ஆனால் கடந்து போன காலத்தை எவராலும் வாங்க முடியாது.
நல்லவை எந்த விதத்திலும் எப்போது செய்தாலும் அவை நல்லவையாக நமக்கு பல மடங்காக கிடைக்கும்.
ஒருவர் தவறு செய்துவிட்டு அதற்கு வருந்தி மன்னிப்பு கேட்கும் போது அதனை ஏற்று மன்னித்து விட வேண்டும்.
மன்னிக்காமல் விலகிப் போனால் அதைவிட மோசமான செயல் வேறு எதுவும் இல்லை. தன்னைப் பற்றி எவரிடத்திலும் அறியாத நபர்கள் உள்ள இடத்தில் தற்பெருமை பேசுகிறவன் தற்கொலை செய்வது சமம்.
நமக்கு என்ன உரிமைகள் இந்த பூமியில் உள்ளதோ, அதேபோல எல்லா ஜீவராசிகளும் வாழ்வதற்கான உரிமையை அதற்கான அடிப்படையில் இறைவன் படைத்துள்ளான். எந்த ஜீவராசிகளும் மனிதருக்கு அடிமை இல்லை.
துன்பம் இல்லாமல் வாழ வேண்டுமானால் நமக்குள் ஏற்படும் வீணான ஆசைகளை துறக்க வேண்டும். பசியை விட மிக கொடியது வேறெதுவும் இல்லை.
நமக்கும் எளியவர்களாக இருப்பவர்கள் நம்மிடம் உதவி கேட்டால் தயங்காமல் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு, ஜெயமூர்த்தி கூறினார்.

