/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி பிரதான கால்வாயில் உடைப்பு புதுப்பிக்க நிதி ஒதுக்காததால் அடிக்கடி பாதிப்பு
/
அமராவதி பிரதான கால்வாயில் உடைப்பு புதுப்பிக்க நிதி ஒதுக்காததால் அடிக்கடி பாதிப்பு
அமராவதி பிரதான கால்வாயில் உடைப்பு புதுப்பிக்க நிதி ஒதுக்காததால் அடிக்கடி பாதிப்பு
அமராவதி பிரதான கால்வாயில் உடைப்பு புதுப்பிக்க நிதி ஒதுக்காததால் அடிக்கடி பாதிப்பு
ADDED : பிப் 08, 2024 02:16 AM

உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதில், புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் பயன்பெறும், 25,500 ஏக்கர் நிலங்களுக்கு, பிரதான கால்வாய் வழியாக நீர் வழங்கப்படுகிறது.
அணையிலிருந்து, 64 கி.மீ., துாரம் அமைந்துள்ள பிரதான கால்வாய், 60 ஆண்டுக்கும் மேல் பழமையானதாகவும், பல ஆண்டுகளாக பராமரிக்காததால், கான்கிரீட் கால்வாய் கரைகள் உடைந்து உள்ளன.
மேலும், மடைகள், குகை நீர் வழித்தடங்கள் சிதிலமடைந்தும் காணப்படுவதால், நீர் விரையம், பாசனத்திற்கு நீர் வினியோக சிக்கல் என பெரும்பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதை முழுமையாக புதுப்பிக்க, அரசு நிதி ஒதுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அணையிலிருந்து கடந்த, 1ம் தேதி முதல், பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. முதல் சுற்று துவங்கிய நிலையில், நேற்று மாலை, சாமராயபட்டி அருகே, கி.மீ., 10 - 5 பகுதியில், திடீர் உடைப்பு ஏற்பட்டது.
இங்கு, கால்வாய் வழித்தடத்தில், இரு புறமும் உள்ள ஓடை நீர், மழை காலங்களில், கால்வாயை பாதிக்காமல் கடக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ள 'அண்டர் டனல்' பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, கால்வாய் கரையும் முழுதும் சேதமடைந்தது.
கால்வாயில், வினாடிக்கு, 440 கன அடி நீர் சென்று கொண்டிருந்த நிலையில், திடீர் உடைப்பு காரணமாக, பாசனநீர் முழுதும் வீணாகியது.
கரை உடைந்து, பல மணி நேரம் வெளியேறிய நீர் அருகிலுள்ள, விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும், அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
கால்வாய் உடைந்த பகுதியை, நீர் வளத்துறை சிறப்பு தலைமைப்பொறியாளர் பாண்டி, செயற்பொறியாளர் கோபி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

