தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துாய்மைப்பணியாளருக்கு காலை உணவு திட்டம்

 துாய்மைப்பணியாளருக்கு காலை உணவு திட்டம்

 துாய்மைப்பணியாளருக்கு காலை உணவு திட்டம்


ADDED : பிப் 10, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, இரண்டாவது கட்டமாக நேற்று முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூரில் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சியில் நேற்று முதல் உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. பி.என். ரோடு, மில்லர் ஸ்டாப் அருகேயுள்ள சமையல் கூடத்தில் தயாரித்து, டிபன் பாக்ஸ்களில் அடைத்து, பகுதிவாரியாக வாகனம் மூலம் கொண்டு சென்று வினியோகிக்கப்படுகிறது.

காலை நேரம் துாய்மைப்பணியில் ஈடுபடும் 3023 பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. மதியம் பணியாற்றும் 50 பேருக்கு மதிய உணவும், இரவு பணியாற்றும் 100 பேருக்கு இரவு உணவும் அவர்கள் பணியாற்றும் இடத்தில் கொண்டு சென்று வழங்கப்படும். தினமும் 3,173 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இதற்காக 6,346 டிபன் பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

நான்கு மண்டலங்களிலும் மண்டல தலைவர்கள் முன்னிலையில் துவக்க விழா நடந்தது. துாய்மைப் பணியாளர்களுக்கு வாழை இலையில் கேசரி, மெதுவடை, இட்லி, பொங்கல், சட்னி மற்றும் சாம்பார் பரிமாறப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us