/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மூச்சுத்திணறும்' என்.ஜி.ஆர்., ரோடு
/
'மூச்சுத்திணறும்' என்.ஜி.ஆர்., ரோடு
ADDED : ஏப் 22, 2025 06:38 AM

பல்லடம்; பல்லடத்தில், அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், தினசரி மார்க்கெட், வாரச்சந்தை உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்த இடமாக, என்.ஜி.ஆர்., ரோடு உள்ளது.
முக்கிய பண்டிகை, விசேஷ தினங்கள், வாரச்சந்தை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் மற்றும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.
தாறுமாறாக கடைகள் அமைப்பது, வாகனங்களை பார்க்கிங் செய்வது, விதிமுறை மீறி சரக்கு வாகனங்களை கடைவீதிக்குள் கொண்டு வருவது என, பல்வேறு விதிமீறல்களால், கடும் இன்னல்களை சந்திக்கின்றனர். கடைவீதியில் ஏற்பட்டு வரும் நெரிசல் மற்றும் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என, பலமுறை வலியுறுத்தியும், போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.
வியாபாரிகள் கூறுகையில், 'போலீசார், போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை. நகராட்சி நிர்வாகமும், கடைகளை முறைப்படுத்துவதில்லை.
விதிமீறல்களுக்கு அதிகாரிகள் எதற்காக துணை போகின்றனர் என்ற கேள்வி எழுகிறது. இப்பிரச்னைக்கு, உரிய தீர்வு காண வேண்டும்' என்றனர்.