/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மணப்பெண் அலங்காரம் கலை விழாவில் கலக்கல்
/
மணப்பெண் அலங்காரம் கலை விழாவில் கலக்கல்
ADDED : செப் 27, 2024 11:42 PM

திருப்பூர்: அரசு கல்லுாரி மாணவியரின் திறமையை வெளிக்கொணரும் விதமாக, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில், பல்சுவை கலைநிகழ்ச்சி மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது. கடந்த, 26ம் தேதி துவங்கிய நிகழ்ச்சி, இன்று நிறைவு பெறுகிறது.
நேற்று ஒவ்வொரு பிரிவு மாணவியர் குழுவினர் கோலத்தின் கைவண்ணம் எனும் தலைப்பில் ரங்கோலி கோலப்போட்டி, மணப்பெண் சிகை அலங்கார போட்டி, பேசாமல் சைகை மொழியில் ('மைம்') நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
அடுப்பில்லா சமையல் போட்டியில் ரெடிமேடு உணவுகளை உடனடியாக தயாரிப்பது, சத்து நிறைந்து தானிய உணவுகளை வேகமாக தயாரித்து குடும்பத்தினருக்கு வழங்குவது குறித்து மாணவியர் விளக்கினர்.
முன்னதாக கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் ஒவ்வொரு போட்டியிலும் திறமை காட்டி வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு தெரிவித்தார். இன்றுடன் கலை, கலாச்சார நடன போட்டிகளுடன் விழா நிறைவு பெறுகிறது.
நுண்கலை மன்ற செயலர் மாணவி கிருத்திகா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.