தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நல்லாறு குறுக்கே பாலம் கட்டுமான பணி மந்தம் 

 நல்லாறு குறுக்கே பாலம் கட்டுமான பணி மந்தம் 

 நல்லாறு குறுக்கே பாலம் கட்டுமான பணி மந்தம் 


ADDED : மார் 13, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில், நல்லாற்றின் குறுக்கில் பாலம் கட்டும் பணி சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் துவங்கியது.

நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், மாநகராட்சி பகுதியில் மூன்று இடங்களில் பாலம் கட்டும் பணி திட்டமிட்டு துவங்கியது. இதில், நடராஜா தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கில் பாலம் கட்டும் பணிநிறைவடைந்து தற்போது பயன்பாட்டில் உள்ளது. அதேபோல் ஈஸ்வரன் கோவில் அருகே நொய்யலின் குறுக்கில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக, நல்லாற்றின் குறுக்கே பிச்சம் பாளையம்புதுார் பகுதியில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியில் பெரும்பான்மையான பகுதி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு நிலவிய குப்பை கழிவுகள் பிரச்னை காரணமாக கட்டுமானப் பணிகள் சிலநாட்கள் நிறுத்தப்பட்டன.

தற்போது குப்பை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில் பாலம் கட்டுமானப்பணி சிலநாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் துவங்கியது. இப்பணிகளை மாநகராட்சி துணை கமிஷனர் சுந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின், அவர் கூறுகையில், 'பாலம் கட்டுமானத்தில் பெருமளவு பணி முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

பாலம் கட்டுமானப் பணி முடிந்த பின், இரு புறங்களிலும் அணுகு சாலை அமைத்து போக்குவரத்து பயன்பாட்டுக்கு திறக்கப்படும். அணுகு சாலை அமைக்கும் பணி மாநகராட்சி பொது நிதியில் மேற்கொள்ளப்படும்,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us