/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்திப்பு பகுதியில் பாலம் கட்டுமான பணி வேகத்தடை இல்லாமல் பாதிப்பு
/
சந்திப்பு பகுதியில் பாலம் கட்டுமான பணி வேகத்தடை இல்லாமல் பாதிப்பு
சந்திப்பு பகுதியில் பாலம் கட்டுமான பணி வேகத்தடை இல்லாமல் பாதிப்பு
சந்திப்பு பகுதியில் பாலம் கட்டுமான பணி வேகத்தடை இல்லாமல் பாதிப்பு
ADDED : மார் 12, 2024 09:59 PM

உடுமலை;உடுமலை அருகே மாநில நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில், வேகத்தடை அமைத்து விபத்துகளை தவிர்க்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை நகரில், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கும் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், அதிக வாகன போக்குவரத்து உள்ளது. இந்த ரோடும், பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை சந்திக்கும் சந்திப்பு இந்திரா நகர் அருகே அமைந்துள்ளது.
நான்கு வழிச்சாலைக்கான அணுகுசாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஆனால், மாநில நெடுஞ்சாலையை கடந்து, பிரதான நான்கு வழிச்சாலையுடன் அணுகுசாலை இணைய எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லை.
எனவே, அணுகுசாலையில் இருந்து பிரதான சாலையை இணைக்க, மேம்பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. நீண்ட இழுபறிக்குப்பிறகு, பாலம் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது.
ஆனால், அவ்விடத்தில், முறையான அறிவிப்புகள் எதுவும் வைக்கப்படாமல், பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மாநில நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்களும், நான்கு வழிச்சாலையின் அணுகுசாலை வழியாக வரும் வாகனங்களும் சந்திப்பு பகுதியில், குறுக்கும், நெடுக்குமாக ரோட்டை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும், பாலம் கட்டுமான பணிகளுக்காக பொருட்களை ஏற்றி வரும் லாரிகளும், அதிவேகத்தில் ரோட்டை கடந்து செல்கின்றன. அப்பகுதி முழுவதும் புழுதி பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.
இத்தகைய குளறுபடிகளால், சந்திப்பு பகுதியில், காலை, மாலை நேரங்களில், நெரிசல் அதிகரித்து விபத்துகளும் ஏற்படுகிறது. தற்காலிக தீர்வாக, மாநில நெடுஞ்சாலையிலும், அணுகுசாலையிலும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
கட்டுமான பணிகள் நடைபெறுவது குறித்து, முறையான தகவல் மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

