/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலம் கட்டுமான பணிகள் இழுபறி நான்கு வழிச்சாலையில் குழப்பம்
/
பாலம் கட்டுமான பணிகள் இழுபறி நான்கு வழிச்சாலையில் குழப்பம்
பாலம் கட்டுமான பணிகள் இழுபறி நான்கு வழிச்சாலையில் குழப்பம்
பாலம் கட்டுமான பணிகள் இழுபறி நான்கு வழிச்சாலையில் குழப்பம்
ADDED : ஏப் 23, 2025 12:33 AM

உடுமலை, ;திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், உயர் மட்ட பாலம் கட்டுமான பணி இழுபறியாக நடப்பதால், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகியுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, மடத்துக்குளம் வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த, 2018ல் துவங்கியது. கடந்தாண்டு பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
ஆனால், உடுமலை பகுதியில், பல்லடம் மற்றும் தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையுடன் சந்திக்கும் பகுதியில், உயர் மட்ட பாலம் கட்டுமான பணி மட்டும் தாமதமாக துவக்கப்பட்டது.
இதில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழிச்சாலை இணையும் இடத்தில், பாலப்பம்பட்டியில் இருந்து துவங்கும் அணுகுசாலையும் இணைகிறது.
இப்பகுதியில், உயர் மட்ட பாலம் கட்டும் பணி இழுபறியாக நடக்கிறது. ஆனால், இருபுறமும் உள்ள அணுகுசாலைகளில், போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாநில நெடுஞ்சாலையிலும், நான்கு வழிச்சாலையிலும் இணைய வாகன ஓட்டுநர்கள் தாறுமாறாகச்செல்கின்றனர். நான்கு வழிச்சாலையில், வரும் வாகனங்கள் அதிவேகத்தில் வந்து, மாநில நெடுஞ்சாலையை கடக்கும் போது, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
இக்குழப்பத்தால், அப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகியுள்ளது; காலை, மாலை நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது.
பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, உயர் மட்ட பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அவ்விடத்தில், தகவல் பலகை வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.