/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலம் கட்டுமானப்பணி தீவிரம்: நொய்யலில் தண்ணீர் மடைமாற்றம்
/
பாலம் கட்டுமானப்பணி தீவிரம்: நொய்யலில் தண்ணீர் மடைமாற்றம்
பாலம் கட்டுமானப்பணி தீவிரம்: நொய்யலில் தண்ணீர் மடைமாற்றம்
பாலம் கட்டுமானப்பணி தீவிரம்: நொய்யலில் தண்ணீர் மடைமாற்றம்
UPDATED : ஜூன் 11, 2025 06:45 AM
ADDED : ஜூன் 10, 2025 11:22 PM

திருப்பூர்: நொய்யல் ஆற்றில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், ஆற்றில் ஒரு பகுதியில் தண்ணீர் செல்வது தடை செய்து, மறுபுறத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.
திருப்பூர் நகரின் மையப்பகுதியில் கடந்து செல்லும் நொய்யல் ஆற்றில், ஈஸ்வரன் கோவில் அருகே உயர்மட்டப் பாலம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலம் இடித்து அகற்றி தற்போது புதிய விரிவுபடுத்திய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி வாயிலாக, இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2023ல், இப்பாலம் கட்டுமானப்பணி பல்வேறு காரணங்களால் தாமதமாகியது. தற்போது, இப்பணி வடக்கு பகுதியில் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது.
அதனையடுத்து, பயன்பாட்டில் இருந்த பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டது.அதன் தொடர்ச்சியாக மீதமுள்ள தென்புறத்தில் பாலம் கட்டுமானப் பணி துவங்கப்படவுள்ளது.
முன்னர் இதன் கட்டுமானப் பணி துவங்கிய போது, ஆற்றின் வடக்கு பகுதியில் ஆற்றில் செல்லும் தண்ணீர் தடுக்கப்பட்டு, தென் பகுதியில் மட்டும் தண்ணீர் கடந்து செல்லும் வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.
தற்போது வடபுறத்தில் பணி முடிந்து தென்புறத்தில் துவங்கவுள்ளது. இதற்காக, ஆற்றில் தற்போது தென்புறத்தில் தண்ணீர் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பகுதியில் உயரமாக மண் கொட்டி தண்ணீர் செல்வது திருப்பி விடப்பட்டுள்ளது.
பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ள வட பகுதியில் புதிய பாலத்தின் கீழ் பகுதியில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தண்ணீர் தடைப்பட்டுள்ள பகுதியில் புதிய பாலம் கட்டுமானம் துவக்க, பழைய பாலத்தின் இடிபாடுகள் அகற்றும் பணி நடக்கிறது.