தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாலம் கட்டுமான பணிபோக்குவரத்து தடை

 பாலம் கட்டுமான பணிபோக்குவரத்து தடை

 பாலம் கட்டுமான பணிபோக்குவரத்து தடை


ADDED : ஜன 12, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: நொய்யல் ஆற்றின் குறுக்கில் பாலம் கட்டும் பணி காரணமாக, ஈஸ்வரன் கோவில் அருகே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் நொய்யல் ஆற்றின் குறுக்கில், ஈஸ்வரன் கோவில் அருகே புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஈஸ்வரன் கோவில் வீதியையும், யூனியன் மில் ரோட்டையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்படுகிறது. இப்பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழைய பாலம் இடித்து அகற்றப்பட்ட நிலையில், இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. மின் மயான ரோட்டில் சென்று வளம் பாலம் வழியாக வாகனங்கள் சுற்றிச் சென்று ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் முத்துச்சாமி வீதி பகுதியை அடைந்தன.

இந்நிலையில் நொய்யல் ஆற்றின் மீது ஒரு பாதி பகுதியில் பாலம் கட்டும் பணி நிறைவடைந்து கடந்த இரு மாதமாக, இரண்டாவது பாதி பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதில் ஆற்றின் உட்புறத்தில் ஒரு துாண் அமையும் இடத்தில் பணி முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக ஆற்றை ஒட்டி கரைப்பகுதியில் அடுத்த துாண் கட்டி பாலம் கட்டும் பணி தொடரவுள்ளது.

இதற்காக, முத்துச்சாமி ரோட்டில் குழி தோண்டும் பணி துவங்கியது. இதையடுத்து செல்லாண்டியம்மன் கோவில் முதல் கஜலட்சுமி தியேட்டர் வரையிலான பகுதி வரை வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாலம் கட்டுமானப் பணி துவங்கி, மந்த கதியில் நடந்து வந்த நிலையில் வாகன ஓட்டிகள்சிரமத்தைச் சந்தித்தனர். தற்போது வரை பயன்படுத்திய பாதையும் மூடப்பட்டுள்ளதால் மேலும் அவதி அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டுமானப் பணியை விரைந்து மேற்கொண்டு நிறைவு செய்து, போக்குவரத்துக்கு திறக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us