/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலம் பணி இரு ஆண்டாக இழுபறி ;அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு
/
பாலம் பணி இரு ஆண்டாக இழுபறி ;அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு
பாலம் பணி இரு ஆண்டாக இழுபறி ;அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு
பாலம் பணி இரு ஆண்டாக இழுபறி ;அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு
ADDED : அக் 07, 2025 12:53 AM

உடுமலை;உடுமலை நான்கு வழிச்சாலை பணியில், தரைப்பாலம் அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக இழுபறியாகி வருவதால், அடிக்கடி குடிநீர் குழாய் உடைக்கப்படுவதோடு, விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.
உடுமலை தாராபுரம் ரோடு, பெரியகோட்டை ஊராட்சி, மதுமிதா நகர், வாஞ்சிநாதன் நகர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, குடிநீர் குழாய் தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ளது.
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வரும் நிலையில், குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாவதோடு, இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை.
நான்கு வழிச்சாலையில், தாராபுரம் ரோட்டில், தரைமட்ட பாலம் அமைக்கும் பணிக்கு குழி தோண்டப்பட்ட நிலையில், இரு ஆண்டுகளாக பணி முடிக்காமல், இழுபறியாகி வருகிறது. இதனால், இப்பகுதியில் செல்லும் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, மக்கள் பாதித்து வருகின்றனர்.
மேலும், பிரதான ரோட்டில் பாலம் பணிக்காக தோண்டப்பட்ட குழி, இரு ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் உள்ளதால், அடிக்கடி குழியில் வாகனங்கள் விழுந்து விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே, பாலம் பணியை விரைந்து முடிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.