/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகளத்தில் பிரகாசித்த பிரைட் பள்ளி மாணவியர்
/
தடகளத்தில் பிரகாசித்த பிரைட் பள்ளி மாணவியர்
ADDED : ஆக 25, 2025 10:30 PM

திருப்பூர்; திருப்பூர், தெற்கு குறுமைய விளையாட்டு போட்டிகளை, சர்க்கார் பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பொறுப்பேற்று நடத்தியது.
இதில், 14 வயது பிரிவில், எறிபந்து, சிலம்பம் சுற்றுதல் மற்றும் தடகள போட்டிகளில், திருப்பூர், காங்கயம் சாலை, விஜயாபுரத்தில் உள்ள பிரைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இதில், மாணவி மேகனா, 600மீ., ஓட்டத்தில் முதலிடம்; 400மீ., ஓட்டத்தில், இரண்டாமிடம், 400மீ., தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார். மாணவி நிவிதா, நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம்; 200மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம்; 400மீ., தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார். மாணவிகள் பிரித்திகா மற்றும் தருண்யா ஸ்ரீ ஆகியோர், 400மீ., தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாணவியரை அன்பு அறக்கட்டளை தலைவர் மோகன், பொருளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.