தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பழுதாகி நின்ற லாரி; போக்குவரத்து தடை

 பழுதாகி நின்ற லாரி; போக்குவரத்து தடை

 பழுதாகி நின்ற லாரி; போக்குவரத்து தடை


ADDED : ஏப் 16, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 03:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: பல்லடம் போஸ்ட் ஆபீஸ் வீதியில், வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது. நேற்று கூட்டுறவு சங்கத்துக்கு வந்து பொருட்களை இறக்கிவிட்டு திரும்பிச் செல்ல முயன்ற லாரி ஒன்று, நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால், போஸ்ட் ஆபீஸ் வீதியில், வாகன போக்குவரத்து முழுமையாக தடைபட்டது.

பொதுமக்கள் கூறுகையில், ''போஸ்ட் ஆபீஸ் வீதி மிகவும் குறுகலானது. கூட்டுறவு சங்க அலுவலகத்தின் நுழைவு வாயிலும் குறுகலாகவே உள்ளது. இதனால், வாகனங்கள் உள்ளே செல்ல சிரமப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும்கூட்டுறவு சங்கத்துக்கு வந்து செல்லும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

நேற்று காலை, 8.00 மணிக்கு லாரி பழுதான நிலையில், பல மணி நேரமாகியும் லாரி அகற்றப்படவில்லை.

இந்த வீதியில் போஸ்ட் ஆபீஸ், வி.ஏ.ஓ., அலுவலகம், ரேஷன் கடை, கோவில் மற்றும் பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர் அலுவலகங்கள் உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக போக்குவரத்து தடைபட்டது.

எனவே, கூட்டுறவு சங்க அலுவலக நுழைவாயிலை அகலப்படுத்த வேண்டும்'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us