தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பழுதாகி நின்ற மினி பஸ் போக்குவரத்து நெரிசல்

பழுதாகி நின்ற மினி பஸ் போக்குவரத்து நெரிசல்

பழுதாகி நின்ற மினி பஸ் போக்குவரத்து நெரிசல்


ADDED : ஜூன் 19, 2025 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் : திருப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் நேற்று காலை 11:30க்கு பயணித்த மினிபஸ் திடீரென பழுதாகி நின்றது. பயணிகள் யாருமில்லாத நிலையில், பஸ்சை விட்டு இறங்கி வந்து டிரைவர் என்ன நடந்தது என ஆராய்ந்தார்.

'பிஸி'யான ரயில்வே மேம்பாலம் என்பதால், அடுத்தடுத்து வாகனங்கள் அவ்விடத்தை கடந்து செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டது. டீசல் அடைப்பு பிரச்னையால் பஸ் நின்றது தெரிய வந்தது. வேறு ஒரு மினி பஸ் வரவழைக்கப்பட்டு, அந்த பஸ்சில் இருந்து பழுதான பஸ்சுக்கு டீசல் நிரப்பபட்டது. அரைமணி நேரத்துக்கு பின் பழுதான பஸ் அங்கிருந்து புறப்பட்டது.

நேற்று முன்தினம் புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்கம் துவக்க விழா நடந்தது. இந்நிலையில் தகுதிச்சான்றிதழ் பெற சென்ற புதிய மினிபஸ் ரயில்வே மேம்பாலத்தில் பழுதாகி நின்றது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us