/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : டிச 25, 2024 09:56 PM

உடுமலை; உடுமலையில், பிரதான குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது.
உடுமலை திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாக கொண்டு, குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், வாளவாடி, தீபாலபட்டி, தேவனுார்புதுார், ராவணாபுரம், ஜிலேபிநாயக்கன்பாளையம் உள்ளிட்ட, உடுமலை ஒன்றியத்திலுள்ள மேற்கு பகுதி கிராமங்களுக்கு குடிநீர் செல்லும் பிரதான குழாய் உள்ளது.
இதில், தீபாலபட்டி, பி.ஏ.பி.,கால்வாய் அருகே, குழாய் உடைப்பு ஏற்பட்டு, இரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. வெளியேறும் நீர், ரோட்டில் தேங்கியுள்ளது. மேலும், குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமங்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காமல், வினியோகத்தில் சிக்கல் ஏற்படுவதோடு, கடைசியிலுள்ள கிராமங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பிரதான குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும்.