/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடைவீதியில் குழாய் உடைப்பு நாள் முழுவதும் தண்ணீர் வீண்
/
கடைவீதியில் குழாய் உடைப்பு நாள் முழுவதும் தண்ணீர் வீண்
கடைவீதியில் குழாய் உடைப்பு நாள் முழுவதும் தண்ணீர் வீண்
கடைவீதியில் குழாய் உடைப்பு நாள் முழுவதும் தண்ணீர் வீண்
ADDED : ஜூன் 07, 2025 11:26 PM

பல்லடம்: பல்லடம் கடைவீதியில், சேதமடைந்த குடிநீர் குழாயால், 24 மணி நேரமும் குடிநீர் வழிந்தோடி வீணாகி வருகிறது.
பல்லடத்தில் மக்கள் தொகை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. குடிநீரை வீணடிக்காமலும், சேமிக்க வேண்டியதும் அவசியமாகியுள்ளது.
பொதுமக்கள் இவ்விஷயத்தில் அலட்சியமாக இருந்தாலும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அதிகாரிகள் கடமை. பல்லடம் கடைவீதியில், 24 மணி நேரமும் குடிநீர் வழிந்தோடி யாருக்கும் பயன்படாமல் வீணாகி வருகிறது.
பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு, விநாயகர், தண்டபாணி கோவில் அருகே, நகராட்சி பொது குடிநீர் குழாய் உள்ளது. இக்குழாயின் 'டேப்' உடைந்து மாதக்கணக்கில் நீர் வெளியேறி வருகிறது.
துவக்கத்தில் சொட்டு, சொட்டாக குடிநீர் வெளியேறிய நிலையில், தற்போது, தொடர்ச்சியாக குடிநீர் வெளியேறி கழிவுநீர் கால்வாயில் பாய்கிறது. பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் பிரதான சாலையில், குடிநீர் வீணாகி செல்வது, யார் கண்ணிலும் படாதது ஆச்சர்யம் தான் என்கின்றனர், அப்பகுதி மக்கள்.