/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடைந்த குழாய்கள்; சீரழிந்த சாலைகள்
/
உடைந்த குழாய்கள்; சீரழிந்த சாலைகள்
ADDED : ஜன 22, 2025 12:22 AM

ஒளிராத விளக்கு
திருப்பூர், 32வது வார்டு, கோல்டன் நகர் மெயின் ரோட்டில் தெருவிளக்கு, 15 நாட்களாக எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
- அபுதாகிர், கோல்டன்நகர். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், 28வது வார்டு, கொங்கணகிரி இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
- திருமூர்த்தி, கொங்கணகிரி. (படம் உண்டு)
நாய்கள் தொல்லை
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- ஜோசப், காதர்பேட்டை. (படம் உண்டு)
கழிவுநீரால் அவதி
திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் - கே.வி.ஆர்., நகர் வழியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- அருண்குமார், பாரப்பாளையம். (படம் உண்டு)-