ADDED : மே 01, 2025 05:41 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்,: மலேஷியா, கோலாலம்பூரில், 14 வது சைலன்ட் நைட் சர்வதேச கராத்தே போட்டி நடந்தது.
இதில், திருப்பூர் வி-கராத்தே அகாடமி நிறுவனர் விஸ்வநாத் தலைமையில் பங்கேற்ற மாணவ, மாணவியர், ஐந்து வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். குழு கட்டா பிரிவில், குகநேத்ரா, சுதிக் ஷா, தேவமித்ரா; தனி நபர் பிரிவில், சுதிக் ஷா; தனிநபர் குமித்தேவில் கோகுல் ஸ்ரீ ராம் வெண்கலம் வென்று அசத்தினர். அகாடமி நிர்வாகிகள் சந்திரகுமார், தலைவர் மணிகண்ட ஆதித்யா, துணைத் தலைவர் குமார், செயலாளர் ஆதர்ஷ் உள்ளிட்டோர் இவர்களை வாழ்த்தினர்.
