/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரும்புக்கம்பியால் தாக்கி தம்பி கொலை; நாடகமாடிய அண்ணன், நண்பன் கைது
/
இரும்புக்கம்பியால் தாக்கி தம்பி கொலை; நாடகமாடிய அண்ணன், நண்பன் கைது
இரும்புக்கம்பியால் தாக்கி தம்பி கொலை; நாடகமாடிய அண்ணன், நண்பன் கைது
இரும்புக்கம்பியால் தாக்கி தம்பி கொலை; நாடகமாடிய அண்ணன், நண்பன் கைது
ADDED : டிச 24, 2024 07:39 AM

அவிநாசி; சேவூர் அருகே தம்பியை கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்ததாக நாடகமாடிய அண்ணன் மற்றும் உடந்தையாக இருந்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே குட்டகம் திருமலைக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 64; இவரது மகன்கள் விவேக், 34, அசோக், 30. மகன்களிடையே சொத்து தகராறு இருந்துவந்தது.
கடந்த 16ம் தேதி டூவீலரில் சென்ற அசோக் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து விபத்தில் இறந்ததாக சேவூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் அசோக் தலையில் பலமாக தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்தது.
சொத்து தகராறில், விவேக் இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியதால் அசோக் இறந்தார். நண்பர் ஆனந்தன், 36, என்பவரின் உதவியுடன் விவேக், சரக்கு ஆட்டோவில் அசோக்கின் உடல் மற்றும் டூவீலரை எடுத்துசென்று குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தள்ளிவிட்டு விபத்தில் சிக்கி இறந்ததாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.
விவேக், நண்பர் ஆனந்தன் ஆகியோரை கைது செய்த போலீசார், கொலைக்குப் பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.