/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் சிறை
/
தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் சிறை
ADDED : ஜூலை 24, 2025 12:12 AM

திருப்பூர்; புதுக்கோட்டை மாவட்டம், வையாம்பட்டியை சேர்ந்த ராம்குமார், 32. திருப்பூரில்,15 வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தில் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி நவீன்குமார், 27; முத்துாரில், மனைவியுடன் தங்கி, பேக்கரியில் வேலை பார்த்து வந்தார்.
நவீன்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேச ராம்குமார், தனது தம்பியை திருப்பூருக்கு அழைத்தார். கடந்த, மார்ச் 29ம் நவீன்குமார் திருப்பூருக்கு வந்து, தனது அண்ணனுடன் பேசினார். அதில், தகராறு ஏற்பட்டதில், நவீன்குமாரின் தலையை பிடித்து, ராம்குமார் சுவரில் மோதியதில் அவர் பலியானார்.
வேலம்பாளையம் போலீசார், ராம்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, எஸ்.சி., / எஸ்.டி., கோர்ட்டில் நடந்தது. தம்பியை கொலை செய்த ராம்குமாருக்கு, ஆயுள் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார். வழக்கில், அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் விவேகானந்தம் ஆஜராகி வாதாடினார்.