/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தம்பிக்கு கத்திக்குத்து; அண்ணனிடம் விசாரணை
/
தம்பிக்கு கத்திக்குத்து; அண்ணனிடம் விசாரணை
ADDED : நவ 25, 2024 06:11 AM
திருப்பூர்; மன்னார்குடியை சேர்ந்தவர் பிரபாகரன், 33. இவரது தம்பி ராஜசேகர், 26. இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
அண்ணன் ராஜசேகர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக தங்கி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று இருவரும் பலவஞ்சிபாளையம் பிரிவில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது, தஞ்சையில் உள்ள இடத்தை விற்று, அந்த பணத்தில் தங்கையின் திருமணம் செய்ததாகவும், அந்த பணத்தை தனக்கு தருமாறும் அண்ணனிடம் தம்பி கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது.
பணத்தை கேட்டு அண்ணனை, தம்பி தாக்கினார். ஆத்திரமடைந்த அண்ணன் பிரபாகரன் கத்தியால் தம்பியை குத்தினார். காயமடைந்த தம்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.