/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பின்றி வீணாகும் பி.எஸ்.என்.எல்., கட்டடம்
/
பராமரிப்பின்றி வீணாகும் பி.எஸ்.என்.எல்., கட்டடம்
ADDED : ஜன 30, 2024 12:08 AM

பொங்கலுார்;பொங்கலுார் அருகே உரிய பராமரிப்பின்றி பி.எஸ்.என்.எல்., கட்டடம் வீணாகி வருகிறது.
ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பொங்கலுார், கள்ளிப்பாளையம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் தற்போது போதிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. கட்டடத்தின் சில இடங்களில் மரங்கள் முளைத்து வளர்ந்து வருகிறது.
சிமென்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுகிறது. கட்டட வளாகத்தில் புதர் செடிகளும், மரங்களும் வளர்ந்து உள்ளது. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அந்த கட்டடம் விரைவில் மண்ணோடு மண்ணாகி விடும்.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அந்த கட்டடத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் வேறு உபயோகத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.