ADDED : ஜன 04, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு 2 சார்பில், புத்தம் புது பூமி வேண்டும் எனும் தலைப்பில், துாய்மை பணி நிகழ்ச்சி நடந்தது.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியர் சிலர் மும்மத வேடமணிந்து, துாய்மை பணியில் ஈடுபட்டனர். மாணவ செயலர்கள் சுந்தரம், செர்லின், தினேஷ் கண்ணன், காமராஜ் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். புத்தாண்டு தின கேக் வெட்டி, அனைவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.