/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹஜ் பயணிகளுக்கான புத்தறிவு பயிற்சி முகாம்
/
ஹஜ் பயணிகளுக்கான புத்தறிவு பயிற்சி முகாம்
ADDED : ஏப் 10, 2025 11:58 PM

திருப்பூர்; ஹஜ் பயணத்தின் போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, சென்னை தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி சார்பில் ஹாஜிக்களுக்கான புத்தறிவு பயிற்சி முகாம் அனைத்து மாவட்டங் களிலும் நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட ஹாஜிக்கள் ஒருங்கி ணைந்த குழுவுடன் இணைந்து, திருப்பூர், காங்கயம் ரோடு, எச்.எம்.எஸ்., மஹாலில் நேற்று புத்தறிவு பயிற்சி முகாம் நடந்தது.
நிர்வாகி சையது ரியாஜ் தலைமை வகித்தார். தாராபுரம் பள்ளிவாசல் ஹஜ்ரத் ரியாஜ் துவக்கி வைத்தார். திருப்பூர் பெரிய பள்ளிவாசல் அரபிக் கல்லுாரி பேராசிரியர் அப்துல் முஜீப் பாகவி, தலைமை இமாம் ஹஜரத் சல்மான் பாரிஸ் பாகவி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி நிர்வாகி அப்துல் கரீம் ஹஜ் பயணம் குறித்து விளக்கினார். அக்பர் அலி மதினா, மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஜக்கரிய்யா ஆகியோர் பேசினர். ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு முஹம்மது நஸ்ருதீன் பதில் அளித்தார். சைபுதீன் நன்றி கூறினார்.