/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பைக்கு தீ வைப்புதேர்வு எழுதுவோர் தவிப்பு
/
குப்பைக்கு தீ வைப்புதேர்வு எழுதுவோர் தவிப்பு
ADDED : மார் 13, 2026 05:48 AM

திருப்பூர்: பள்ளி வளாகம் அருகே குப்பைக்கு தீ வைக்கப்பட்டதால், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியை ஒட்டி, காதர்பேட்டை, சின்னான் நகர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. பள்ளி வளாகத்தை சுற்றிலும் அமைந்துள்ள இப்பகுதிகளுக்கும் பள்ளி வளாகத்துக்கும் இடையே சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுவற்றின் ஓரத்தில் சினனான் நகர் பகுதியில் குப்பைகழிவுகள் கொட்டிக் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பை குவியலில் கடந்த இரு நாட்களாக யாரோ தீ வைத்துள்ளனர்.
இதிலிருந்து கிளம்பிய புகை கடும் துர்நாற்றத்துடனும், கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையிலும் காற்றில் பரவி பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது நஞ்சப்பா பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடக்கிறது.
இந்த குப்பையில் பற்ற வைத்த தீயில் கிளம்பிய புகை பள்ளி வளாகத்திலும், தேர்வு அறை பகுதிகளிலும் காற்றில் பரவி பெரும் அவதியை ஏற்படுத்தியது. மேலும், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர்.

