ADDED : டிச 11, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கோவையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பஸ், கன்ெடய்னர் லாரி மோதிய விபத்தில், 12 பயணிகள் காயமடைந்தனர்.
கோவையில் இருந்து, 36 பயணிகளுடன் ராமேஸ்வரம் நோக்கி அரசு பஸ் தாராபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது. அரசு பஸ் தாராபுரம், தெக்கலுார் அருகே வந்த போது, அவ்வழியாக சென்ற கன்ெடய்னர் லாரியின் பின்னால், அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது.
டிரைவர், பயணிகள் உட்பட, 12 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக மற்ற பயணிகள் தப்பினர். காயமடைந்தவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.