sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெடுஞ்சாலையில் 'பஸ் பே' அமைத்தால் நெரிசலுக்கு தீர்வு! துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியம்

/

நெடுஞ்சாலையில் 'பஸ் பே' அமைத்தால் நெரிசலுக்கு தீர்வு! துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியம்

நெடுஞ்சாலையில் 'பஸ் பே' அமைத்தால் நெரிசலுக்கு தீர்வு! துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியம்

நெடுஞ்சாலையில் 'பஸ் பே' அமைத்தால் நெரிசலுக்கு தீர்வு! துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியம்


ADDED : மார் 01, 2025 05:36 AM

Google News

ADDED : மார் 01, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை நகரப்பகுதியில், ஏற்படும் நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலையில், 'பஸ் பே' அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை அமைந்துள்ளது. மேலும் உடுமலை வழியாக தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு நகரங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்கின்றன.

இதனால், இங்கு போக்குவரத்து அதிகளவு காணப்படுகிறது. நகரின் மையப்பகுதியில், பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகியவை அமைந்துள்ளன.

இந்த ரோட்டை ஒட்டி, நகர எல்லையில், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரி என கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வரிசையாக உள்ளன.

இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாத அளவுக்கு, நெரிசல் காணப்படுகிறது. இதற்கு, தேசிய நெடுஞ்சாலையிலேயே பஸ்களை, நிறுத்தி, பயணியரை ஏற்றி, இறக்குவது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

குறுகலான ரோட்டில், பஸ்கள் இருபுறமும் நிற்கும் போது, பிற வாகனங்கள், விலகி செல்ல முடியாமல், ஒரு பஸ் நிற்கும் போது, பின்னால், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

பின்னர், அவசரகதியில், வாகனங்கள் முந்தி செல்லும் போது, ரோட்டை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. நடந்து செல்பவர்களுக்காக அப்பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதையும் காட்சிப்பொருளாக மாறி விட்டது. இத்தகைய நெரிசல் மிகுந்த பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பஸ்கள் நிறுத்துவதற்கான தனியாக 'பஸ் பே', எனப்படும் இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அதற்கான குறியீடுகளையும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்தால், பஸ்கள் நிற்கும் போது, தேசிய நெடுஞ்சாலையில், பிற வாகனங்கள் தடையில்லாமல் செல்லும்.

ஆய்வு செய்யணும்


இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், நகரப்பகுதியில், நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அனைத்து துறை ஆலோசனை கூட்டம் நடத்தி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us