/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாய்க்காலில் மூழ்கி பஸ் டிரைவர் பலி
/
வாய்க்காலில் மூழ்கி பஸ் டிரைவர் பலி
ADDED : மே 14, 2025 07:01 AM
பல்லடம்; பல்லடம், மாணிக்காபுரத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் பத்மநாபன், 29; தனியார் பஸ் டிரைவர். நேற்று முன்தினம் மதியம், பல்லடம்,- மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள, பி.ஏ.பி., வாய்க்காலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். இரவு வரை வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினர் அவரைத் தேடி வந்துள்ளனர். நேற்று, பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரித்து வந்த நிலையில், பத்மநாபன் குளிக்கச் சென்றதாக கூறப்பட்ட வாய்க்காலில், 700 மீ., தொலைவில், சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, சடலம் வெளியே எடுக்கப்பட்டது.
விசாரிக்கையில், அது, குளிக்கச் சென்ற பத்மநாபனின் உடல் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பல்லடம் போலீசார் இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

