ADDED : செப் 18, 2026 07:31 PM
குன்னத்துார், செப். 19–
குன்னத்துாரில் புதிய பஸ் ஸ்டாண்ட், 3.46 கோடியில் கட்டப்படுகிறது. பணியை ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில், 60 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு இன்னும் ஷட்டர்கள் அமைக்கப்படவில்லை. பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை அமைக்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெறாமல் விட்டு விட்டு நடந்து வருகிறது. தரைத்தளம் அமைக்கும் பணியும் இன்னும் துவங்கவில்லை. பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நடைபெற்று வருவதால், பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் பயணிகள் காத்திருப்பதற்கு போதிய நிழற்குடை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
